ஈரானின் தாக்குதல் அமெ.டாலரை குறி வைத்துள்ளது
திருவனந்தபுரம் ஈரானின் புதிய ஏவுகணை தாக்குதல்கள் வெறும் ராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டதல்ல, மாறாக டாலரை இலக்காகக் கொண்டது என்று டாக்டர் டி. எம். தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார். ஒரு நாடு போர் உத்தியின் ஒரு பகுதியாக டாலரை குறிவைப்பது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னர் டாக்டர் தாமஸ் ஐசக் தனது முக நூல் பதிவில் தெரிவித்திருப்ப தாவது, ஈரானின் புதிய ஏவுகணை தாக்குதல்கள் அமெரிக்காவின் ராணுவத் தளங்களை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல. அது டாலரை இலக்காகக் கொண்டது. ஒரு நாடு போர் உத்தியின் ஒரு பகுதியாக டாலரை குறிவைப்பது இதுவே முதல் முறை. ஈரான் ஏற்கெனவே சீனாவுக்கு யுவானில் எண்ணெய் விற்பனை செய்து வரு கிறது. அது இந்தியாவுக்கு ரூபாயி லும் விற்பனை செய்து வந்தது. டால ரில் விலை நிர்ணயம் செய்து விற் பனை செய்வதை நிறுத்தி நீண்ட காலமாகிவிட்டது. ஆனாலும் டால ருக்கு பாதிப்பில்லை. ஏனெனில் ஈரானின் உற்பத்தி, உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் வெறும் 4 முதல் 4.5 சதவிகிதத்தை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், பாரசீக வளைகுடா நாடுகள் அனைத்தும் தங்கள் எண் ணெய் விற்பனையை டாலரிலி ருந்து யுவானுக்கு மாற்றினால் என்னவாகும்? நிலைமையே மாறி விடும். அது உலக எண்ணெய் உற் பத்தியில் சுமார் 30 சதவிகிதத்தைக் கொண்டிருக்கும். 1971-இல் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் சவூதி மன்னருடன் பெட்ரோல்-டாலர் ஒப்பந்தம் செய்த பிறகு, அரபு நாடுகள் தங்கள் எண்ணெய் அனைத்தையும் டாலரிலேயே விற்பனை செய்கின்றன. எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் இதற்காக டாலர்களை ஈட்ட வேண்டியிருந்தது. சதாம் கடாபியின் உயிர் விலையானது மறுபுறம், அரபு நாடுகள் தாங்கள் பெறும் டாலர்கள் அனைத்தையும் பொதுவாக அமெ ரிக்கப் பத்திரங்களில் முதலீடு செய்வது வழக்கம். பெட்ரோலை அடிப்படையாகக் கொண்ட டாலர்களுக்கான இந்தத் தேவை, டாலரின் உலகளாவிய ஆதிக் கத்தைப் பேணுவதில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. வெளி நாட்டு கையிருப்புகளில் சுமார் 50 சதவிகிதம் இன்னும் டாலர்க ளில்தான் உள்ளது. அந்நியச் செலாவணியில் சுமார் 80 சத விகிதம் டாலர்களில் உள்ளது. அமெரிக்காவின் பொரு ளாதார சக்தியின் முக்கிய காரணி டாலர் பரிவர்த்தனையே ஆகும். டாலர்களை அச்சிட்டு, தேவைக் கேற்ப அமெரிக்க நாணயத்தை அச்சடிக்கலாம். செலவிடலாம், மேலும் பிற நாடுகளும் பெருநிறுவ னங்களும் அவற்றை வாங்கி சம்பா திக்கலாம். டாலரின் ஆதிக்கத்தி ற்கு சவால் விட சில முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு, ஈராக்கின் சதாம் ஹுசைனும், லிபி யாவின் கடாபியும் தங்கள் உயிரை விலையாகக் கொடுத்தனர். பிரிக்ஸ் நாடுகள் தமக்குள் நடக்கும் பரிவர்த்தனைகளில் இருந்து டாலரை நீக்குவது பற்றிய திட்டம் மட்டுமே கொண்டிருந்தன. கோபமடைந்த டிரம்ப், பொரு ளாதாரத் தடைகளை விதிப்பதாக அச்சுறுத்தினார். அந்த மிரட்டலு க்கு சீனா மட்டுமே அசைய வில்லை. பிரேசிலின் லூலா மற்றொரு புதிய நாணயம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரால் தனியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ரஷ்யாவோ அமெரிக்கத் தடைகளின் கீழ் உள்ளது. ஈரானின் எச்சரிக்கை மேற்கு ஆசிய எண்ணெய்யில் 80 சதவிகிதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே செல்கிறது. இந்த கப்பல் வழித்தடத்தை ஈரான் மூடி யுள்ளது. ஈரானின் அதிகாரி சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில், உலகப் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் ஹோர்முஸ் ஜலசந்தி யைத் திறக்க முடியும். ஆனால் அந்தக் கப்பலில் உள்ள எண்ணெய் சீன நாணயத்தில் விற்கப்பட வேண்டும் எனவும் இது குறித்து சீனர்கள் எதுவும் கூறவில்லை எனவும் அவர் கூறினார். எனினும் யுவான் வர்த்தகம் தொடர்பாக ஈரான் இன்னும் அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கவில்லை. இருப்பி னும், அல் ஜசீரா செய்தி நிறுவனம் அந்த அதிகாரியின் கூற்றை செய்தியாக ஒளிபரப்பியுள்ளது. ஈரானின் இந்த அச்சுறுத்தல் உண்மையானால், கடந்த அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு டாலருக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய அச்சுறுத்தலாக இதுவாகவே இருக்கும். டாலர் வீழ்ச்சியடையும் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். ஆனால் இது ஒரு முடிவின் தொடக்கமாக இருக்கும்.
