விலை உயர்வை சந்திக்க தயாராகும் இந்தியா
துருக்கி உடனான உறவு துண்டிப்பு
இந்தியா - பாகிஸ் தான் போர் பதற்றத் தின் போது, பாகிஸ் தானுக்கு ஆயுத உத விகளை செய்ததாக குற்றம்சாட்டி துருக்கியுடன் வணிக ரீதியான உறவைத் துண்டித்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. ஏற்கனவே, இந்தியாவிலிருந்து துருக்கிக்கு சுற்றுலா செல்லும் பயணத் திட்டங்கள், கல்வித்துறை ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. அதே போல ஆப்பிள்,மார்பிள் (பளிங்குக் கற்கள்) உள்ளிட்ட சில இறக்குமதிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், துருக்கியுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துக் கொள்ளும்பட்சத்தில் பல இறக்குமதிகள் நிறுத்தப்படலாம். இதனால், நாட்டில் ஒரு சில பொருள் களின் விலை உயரும் அபாயம் ஏற்படும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன.
மார்பிள்
இந்தியாவின் ஒட்டுமொத்த மார்பிள் தேவையில் 70 சதவீதம் துருக்கி யிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படு கிறது. ஒருவேளை துருக்கியிலிருந்து மார்பிள் இறக்குமதி நிறுத்தப்பட்டால், விலை உயர்ந்து, கட்டுமானப் பணிகள் பாதிக்கும், வீடுகளின் விலை அதிகரிக்கும்.
ஆப்பிள்
இந்தியா ஆண்டுதோறும் துருக்கி யிலிருந்து 1.29 லட்சம் டன் அளவில் ஆப்பிள் இறக்குமதி செய்கிறது. தற்போதைய சூழலில் துருக்கி ஆப்பி ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்பிள் விலை கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே போல செர்ரி பழங்கள், உலர் பழங்கள், வாசனைப் பொருட்கள், மருத்துவ குணம் வாய்ந்த தேயிலை, நகைகள், அலங்காரப் பொருட்கள், ஆலிவ் எண்ணெய், சாக்லேட்டுகள், உள் அலங்கார மற்றும் மரச் சாமான்களுக்கு என பல பொருள்கள் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அது நிறுத்தப்பட்டால் நாட்டில் கிடைக்கும் பொருள்களின் விலை கணிசமாக உயரும் அபாயம் ஏற்படும்.