states

தெருநாய்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் கருத்து

தெருநாய்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் உச்சநீதிமன்ற நீதிபதி  விக்ரம் நாத் கருத்து

தில்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு  நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தர விட்டது. இதற்கு பிராணிகள் விரும்பிகள் கடும்  ஆட்சேபணை தெரிவித்தனர். இதனை யடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  பி.ஆர்.கவாய், இந்த விவகாரத்தை 3 நீதி பதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றி னார். இந்த அமர்வு தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என  ஆலோசனை வழங்கியது. இந்நிலையில், தெருநாய்களை காப் பாங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகளில்  ஒருவரான விக்ரம் நாத், தெருநாய் வழக்கு தன்னை உலகம் முழுவதும் பிர பலமடைய வைத்துள்ளதாகவும், தெரு நாய்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என தெரிவித்தார். இதுதொடர்பாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய  சட்ட சேவை ஆணைய மாநாட்டில் பேசிய நீதிபதி விக்ரம்நாத் மேலும் கூறு கையில், “நீண்டகாலமாக, நான் எனது சிறிய வேலைகளுக்காக சட்டத்துறையில் அறியப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த  நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும்  உள்ள முழு சிவில் சமூகத்திலும் எனக்கு  அங்கீகாரம் அளித்ததற்காக தெரு நாய்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும் இந்த வழக்கை  எனக்கு ஒதுக்கியதற்காக நமது தலைமை  நீதிபதிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார். தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வுக்கு பின்  னர் 2027இல் இந்தியாவின் தலைமை நீதி பதியாக விக்ரம் நாத் பொறுப்பேற்க வுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.