தெலுங்கானாவில் கோர விபத்து : லாரி - பேருந்து மோதலில் 24 பேர் பலி
ஹைதராபாத் தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் கானாப்பூர் கேட் பகுதியில் ஜல்லி கற் கள் ஏற்றி வந்த லாரி - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதின. தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழ கத்தைச் சேர்ந்த பேருந்தில் 70 பயணி கள் இருந்தனர். இந்த பேருந்து தந்தூ ரிலிருந்து - ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது திங்கள்கிழமை காலை லாரியின் மீது அதிவேகத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் 10 மாத குழந்தை, 10 பெண்கள், பேருந்து மற்றும் டிப்பர் லாரி ஓட்டுநர் என 24 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ள னர். படுகாயமடைந்த 10 பேர் அருகில் செவெல்லா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதே நேரத்தில் ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் காந்தி மற்றும் உஸ்மானியா மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். சம்பவம் நடந்த இடத் தில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி யின் அறிவுறுத்தலின் பேரில் மீட்பு பணி மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. இந்நிலையில், தெலுங்கானா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும் பத்தினருக்கு பிரதமர் மோடி, முதல மைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிஆர்எஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள னர். மேலும் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களின் குடும்பத்தி னருக்கு தலா ரூ. 50,000 நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதே போல தெலுங்கா னா அரசும் நிவாரணம் அறிவித்துள் ளது.
ராஜஸ்தானில் 12 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஹர்மாரா பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து 17 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி யது. இந்த கோர விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 18க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலர் கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹர்மாரா பகுதியின் சாலை முழுவதும் ரத்தம் சிதறிக் கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
                                    