பாரதிய ஜனதா கட்சியிடம் இந்து சமூக மக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும். மதவெறிக்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். மதுரை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர் களிடம் பேசிய அவர், “திருப்பரங்குன்றம் பிரச்சனையைப் பொறுத் தவரை திருப்பரங்குன்றம் வட்டாரப் பொதுமக்கள் சகோதரத்து வத்துடன் வாழ்ந்து வருகின்றனர். வாழ விரும்புகின்றனர். தமிழ கத்தில் சமூக பதற்றத்தைப் ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. இந்துக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் பற்றி பாஜக கவலைப்படவில்லை. கோவில், மசூதி பிரச்சனைகளை உயர்த்திப் பிடிக்கிறது. வட மாநிலங்களில் சிறுபான்மை மக்களையும், இந்துக் களையும் பிரித்து மத அடிப்படையில் பதற்றத்தை ஏற்படுத்தி வரு கிறது. மதவெறியைத் தூண்டி, வன்முறைக்கு வித்திட்டு மோதலை உருவாக்க முயற்சிக்கிறது. ரத்தக் களறிக்கு வித்திடுகிறது. தமிழக மக்கள் மதவெறி சக்திகளை அனுமதிக்கக் கூடாது. பாஜக விடம் சிறுபான்மை மக்களை விட, இந்து சமூக மக்கள்தான் எச்ச ரிக்கையாக இருக்க வேண்டும்.
தில்லி தேர்தல்
தில்லி சட்டமன்றத் தேர்தலில், பாஜக முன்னிலையில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. ஆம் ஆத்மி இந்த ளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.தில்லியில் பாஜக ஆட்சி அமையுமேயானால், அதை தேசத்துக் கான ஒரு பின்னடைவாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. நியாயமான முறையில் தில்லியில் தேர்தல் நடந்திருக் குமா? என்ற ஐயத்தை எழுப்புகிறது. இந்தியா கூட்டணி கட்டுக் கோப்பாக இல்லை. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஒற்றுமையாக இந்தத் தேர்தலை சந்திக்கவில்லை. இந்தியா கூட்டணித் தலை வர்கள் இதுகுறித்து விரைவில் கலந்தாய்வு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஈகோ பிரச்ச னைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்றுகிற திசையில் சிந்திக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்த லுக்கும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. எனவே, தில்லி தேர்தல் முடிவுகளை ஒரு படிப்பினையாகக் கொண்டு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இதுகுறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்” என்றார்.