states

img

கேரளாவில் கனமழை நீடிக்கும்

கேரளாவில் கனமழை நீடிக்கும் 

கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கோழிக்கோடு  கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை முன் ்கூட்டியே தொடங்கி, கடந்த 3 நாட்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இத னால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கையுடன் அதீத அளவில் கனமழையை எதிர் கொண்டன. இதனால் 3 மாவட் டங்கள் வெள்ளக்காடாய் காட்சி அளித்தன.  இந்நிலையில், புதன்கிழமை அன்றும் கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்கள் ரெட் அலர்ட் எச்ச ரிக்கையுடன் அதீத அளவில் கன மழையை எதிர்கொள்ளும் என இந் திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கோட்டயம், எர்ணாகுளம், பத்தினம்திட்டா, இடுக்கி, திருச் சூர், பாலக்காடு, மலப்புரம், கண் ணூர் மற்றும் காசர்கோடு மாவட் டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பிற மாவட் டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வெள்ள அபாய எச்சரிக்கை எழுந்துள்ளதால், அரக் கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினர் இடுக்கி மாவட்டத் துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிக ளிலும் ரயில் வழித்தடங்களில் ஆங் காங்கே மழை நீர் தேங்கியுள்ள தால் ரயில் சேவை பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் செவ்வாய்க் கிழமை அன்று முக்கிய ரயில்கள் பல தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன என்பது குறிப்பிடத் தக்கது.