கர்பா நடன கொண்டாட்டம் குஜராத்தில் வன்முறை
நவராத்திரி விழாவை முன்னிட்டு வட மற்றும் மேற்கு மாவட்டங்களில் கர்பா நடன கொண்டாட்டம் நடை பெறுவது வழக்கம். இதில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் கர்பா நடன கொண்டாட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்நிலையில், இந்த கர்பா கொண் டாட்டத்தின் போது குஜராத் மாநிலத்தில் வன்முறை வெடித்துள்ளது. காந்திநகர் மாவட்டம் தஹேகாமில் உள்ள பகியால் கிராமத்தில் புதன்கிழமை அன்று நள்ளி ரவு கர்பா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தின் போது சமூக ஊடகப் பதிவு தொடர்பாக இரு சமூகத்தி னரிடையே மோதல் வெடித்தது. ஒருகட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையே கைகலப்பு மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன் முறையில் 10க்கும் மேற்பட்ட வாக னங்கள் சேதமடைந்தன. அதே நேரத்தில் பகியால் கிராமத்தில் உள்ள கடை தீ வைத்து கொளுத்தப்பட்டது. வன்முறை யை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் 2 காவலர்கள் காயமடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் வன்முறை சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் யார்? இது இந்து - முஸ்லிம் இடையேயான மத வன்முறையா? அல்லது சாதி ரீதியிலான வன்முறையா? என்பது தொடர்பாக குஜராத் காவல் துறை விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.