ஜூபீன் கார்க் மரணம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக!
அசாமின் கலாச்சார சின்னமான பிரபல பாடகர் ஜூபீன் கார்க் கடந்த வாரம் சிங்கப்பூரில் திடீரென உயிரிழந் தார். அவர் “ஸ்கூபா டைவிங்கின்” (ஆழ் கடல் நீச்சல்) போது உயிரிழந்ததாக சிங்கப்பூர் நாட்டு அரசு கூறுகிறது. இந்நிலையில், ஜூபீன் கார்க் மர ணத்தை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அசாம் மாநில எதிர்க்கட்சி கள் கோரிக்கை விடுத்துள்ளன. எதிர்க் கட்சிகளின் சார்பாக அசாம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தேபப்ரதா சைகியா (காங்கிரஸ் எம்எல்ஏ) குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,“சிங்கப்பூரில் பாடகர் ஜுபீன் கார்க் மரணத்தைச் சுற்றியுள்ள சந்தேகத்திற்கிடமான கவலைகள் உள்ளன. அதனால் கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசார ணைக்கு உத்தரவிட வேண்டும். அசாம் அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளது. ஆனால் இந்தியாவின் அதிகார வரம்பிற்கு வெளியே (வெளிநாட்டில்) நடந்த ஒரு வழக்கை மாநில காவல்துறை போது மான அளவு கையாள முடியாது. அதனால் குடியரசுத் தலைவர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என அவர் தனது கடி தத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.