states

img

டெல்லி விவசாயிகள் போராட்ட தளத்தில் போடப்பட்டிருந்த தடுப்புகள் முழுமையாக அகற்றம்

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி, உத்திரப்பிரதேச எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நெடுஞ்சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புகளை போலீசார் அகற்றினர்.  

காசிப்பூர் பகுதியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் சுமார் 10 மாதங்களை கடந்துள்ளது. போராட்டம் நடத்தும் விவசாயிகள் தலைநகர் டெல்லிக்குள் செல்லாமல் இருப்பதற்காக காவல்துறை சார்பில் அங்குள்ள நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டன. மேலும் சாலைகளில் விவசாயிகள் போராட கூடாது என உத்தரவும் இடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு உரிமை உண்டு என்றும் ஆனால் சாலைகளை மறித்து போராட உரிமை இல்லை எனவும் தெரிவித்தது. இதனை தொடர்ந்து டெல்லி -  உத்திரப்பிரதேசம் எல்லையான காசிப்பூர் மற்றும் டெல்லி – அரியானா எல்லையான திக்ரி போராட்ட தளத்தில் போடப்பட்டிருந்த தடுப்புகளை போலீசார் அகற்றினர்.  