தில்லி, உத்தரப்பிரதேசம், ஹரி யானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களில் நள்ளிரவு முதல் காலை 9 மணி வரை அடர் மூடு பனி நிலவி வருகிறது. இதனால் வடமாநி லங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடும் குளிர் காரண மாக ராஜஸ்தான் மாநிலத்தின் தலை நகர் ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்க ளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் முதல், 4 நாட்கள் வரை விடுமுறை நீட் டிக்கப்பட்டுள்ளது.