states

img

ராகுல் காந்திக்கு  7 நாள் கெடு விதித்த தேர்தல் ஆணையம்

ராகுல் காந்திக்கு  7 நாள் கெடு விதித்த தேர்தல் ஆணையம்


வாக்கு திருட்டு குற்றச்சாட்டு அளித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு 7 நாள் கெடு விதித்துள்  ளது இந்திய தேர்தல்  ஆணையம். இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல்  ஆணையர் ஞானேஷ் குமார் கூறுகை யில்,”காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நிகழ்ந்து இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் சத்தியப்பிரமாணம் செய்து  7 நாட்களுக்குள் ஒரு விளக்க ஆவ ணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லை யெனில், அவரது வாக்கு திருட்டு குற்றச்  சாட்டுகள் செல்லாது” என அவர் கூறி னார்.  ராகுல் குற்றச்சாட்டுக்கு  பதில் அளிக்காது ஏன்? காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்  ராம் ரமேஷ் கூறுகையில்,”ராகுல் காந் திக்கு கேள்விக்கு பதில் அளிக்காமல் இந்திய தேர்தல் ஆணையம் அச்சுறுத்தல்  விடுக்கிறது.  தேர்தல் ஆணையத்தின் சொந்த தரவுளையே ராகுல் காந்தி கூறினார். தற்போதைய சூழலில் தேர்தல்  ஆணையம் திறமையின்மைக்கு மட்டு மல்ல, அதன் வெளிப்படையான பாகு பாடும் முற்றிலும் அம்பலப்படுத்தப்பட் டுள்ளது” என அவர் கூறினார்.