நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லியில் காற்றின் தரம் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஆபத்தான நிலையில் இருந்தது. அதாவது தில்லியின் பெரும்பாலான பகு திகளில் காற்று தரக் குறியீடு (AQI) 400 புள்ளிகளாக அதிக ரித்தது. இதனால் இமாச்சலப பிரதேசம், ஊட்டி,கொடைக்கானல் பகுதிக ளைப் போன்று தில்லி மாறியது. இந்நிலையில், புதன்கிழமை சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக தில்லியின் பெரும்பாலான இடங்களில் காற்று தரக் குறியீடு 301 புள்ளிகளாக குறைந்தது. இதனால் தில்லியில் காற்று மாசுபாடு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வியாழனன்று மீண்டும் தில்லி யின் காற்று தரக் குறியீடு 313 புள்ளி களாக பதிவானதாக ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் மூடுபனி நிலவியது. மூடுபனி காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிக்கலை எதிர்கொண்டனர். காற்று மாசால் கொரோனா காலங்களைப் போல தில்லி மக்கள் முகக் கவசத்துடன் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.