ரிசர்வ் வங்கியின் (RBI) டாலர் விற்பனை நடவடிக்கைகளால் இந்திய வங்கிகள் கடுமையான பணப்புழக்க நெருக்க டியை எதிர்கொண்டு ள்ளன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு முதன்முறை யாக வங்கிகள் ரூ.14,198 கோடி நிதியை ரிசர்வ் வங்கி யிடமிருந்து கடனாக பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள டொனால்டு டிரம்ப்பின் வர்த்தகக் கொள்கைகள் குறித்த நிச்சய மற்ற தன்மையால் ரூபாய் மதிப்பு கணிச மாக சரிந்து, ஒரு டாலருக்கு ரூ.84.44 ஆக பதிவாகியுள்ளது. இது 15 பைசா வீழ்ச்சியாகும். வர்த்தக அமர்வின் போது ரூபாய் மதிப்பு ரூ.84.48 வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய வங்கி அமைப்பின் அடிப்ப டை பணப்புழக்கம், செப்டம்பர் 27இல் ரூ.4.6 லட்சம் கோடியில் இருந்து நவம்பர் 15இல் ரூ.1.6 லட்சம் கோடியாக குறைந் துள்ளது. அக்டோபர் மாத இறுதி முதல் நவம்பர் 15 வரை ரிசர்வ் வங்கி சுமார் ரூ.1.89 லட்சம் கோடி (22.7 பில்லியன் டாலர்) மதிப்பிலான டாலர்களை விற்பனை செய்துள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். ஐடிஎப்சி வங்கியின் தலைமை பொரு ளாதார நிபுணர் கௌரா சென்குப்தா கூறு கையில்,”வெளிநாட்டு செலாவணி பரி மாற்ற பற்றாக்குறை தொடர்ந்தால், வங்கி அமைப்பின் பணப்புழக்க நெருக்கடி நீடிக்கும்” என்று எச்சரித்துள்ளார்.