தில்லி மதுபானக் கொள்கை வழக்கு கெஜ்ரிவால் உட்பட 23 பேருக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
புதுதில்லி தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி முன்னாள் முத லமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் தில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா (ஆம் ஆத்மி), தெலுங்கானா முன்னாள் எம்எல்சி கவிதா உள்ளிட்ட 23 பேரை பிப்., 27 அன்று தில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் விடு வித்தது. இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது ; குற்றப்பத்திரிகையில் போதிய ஆதாரங்கள் இல்லை என தில்லி நீதிமன்ற நீதிபதி ஜிதேந் திர சிங் குற்றம்சாட்டி, சிபிஐக்கு (மத்திய புல னாய்வு பிரிவு) கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், கெஜ்ரிவால் உள்பட 23 பேரின் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதி மன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த மனு திங்களன்று தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுவர்ணா காந்த சர்மா அமர்வில் விசார ணைக்கு வந்தது. சிபிஐ சார்பாக ஆஜரான ஒன்றிய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, “கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது சட்டத்திற்குப் புறம்பானது. வழக்கின் உண்மைத் தன்மையை முழுமையான விசாரணை மூலம் கண்டறியாமல், வழக்கின் ஆரம்பக்கட்டத்திலேயே அவர்கள் விடுவிக்கப் பட்டுள்ளனர். இது தவறானது” என வாதிட்டார். இதையடுத்து, சிபிஐயின் மனுவை விசார ணைக்கு ஏற்பதாக கூறிய நீதிபதி, இதுதொ டர்பாக பதிலளிக்க கெஜ்ரிவால் உள்ளிட்ட 23 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
