states

img

ராணுவ மேம்பாட்டிற்கான சீர்திருத்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

இந்திய ராணுவத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக உள்ள ராணுவமாக மற்  றும் நோக்கத்துடன் 2025 ஐ சீர்திருத்த  ஆண்டாக அறிவித்துள்ளது பாதுகாப்புத்  துறை அமைச்சகம். இந்த அறிவிப்பை ஜனவரி 1 அன்று ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறி வித்துள்ளார். ஜனவரி 1 அன்று அமைச்சர் ராஜ்நாத்  சிங் தலைமையில் பாதுகாப்பு அமைச் சகத்தின் அனைத்து செயலாளர்களும் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இக்  கூட்டத்தில் ராணுவத்தின் தொழில்நுட்ப  மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள், சீர்திருத்தங்கள், வழிமுறைகள் உள்ளிட் டவை குறித்து ஆய்வு செய்ததாக கூறப்  பட்டது. இக்கூட்டத்தின் முடிவில் 2025 வரு டத்தை பாதுகாப்பு அமைச்சகத்தில் ‘சீர்  திருத்த ஆண்டாக’ கடைப்பிடிக்க ஒருமன தாக முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்திய ராணுவத்தின் பிரிவுகளாய் நவீனமயமாக்கும் பயணத்தில் இந்த சீர்திருத்தங்களுக்கான ஆண்டு ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.