states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையை செய்யவிடாமல் முடக்கிய மோடி அரசு, கடந்த வாரம் ஜனநாயக உரிமைப்படி போராடியதையும் முடக்கியது. நாடாளுமன்றத்துக்குள் தற்போது சிஐஎஸ்எப் வீரர்களை களமிறக்கி உள்ளனர். இது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல்.

திமுக எம்.பி., திருச்சி சிவா

பீகாரில் வாக்காளர் திருத்தப் பட்டியல் என்ற பெயரில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அதிகார வரம்புக்கு மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. இன்றைக்கு பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட்டது வரும் காலங்களில் நாடு முழுவதும் நடைபெற வாய்ப்புள்ளது. நாடாளுமன்றத்தில் வாக்காளர் திருத்தப் பட்டியல் குறித்து விவாதம் நடத்த வேண்டும்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,  சாகேத் கோகலே

ராகுல் காந்தியை “உண்மையான இந்தியரா” என உச்சநீதிமன்றம் கேட்பது மிகவும் ஆபத்து. அரசாங்கத்தை கேள்வி கேட்பதால் ஒருவர் இந்தியர் இல்லை என ஆகிவிட முடியாது. “உண்மையான இந்தியன்” என்பதற்கான சான்றிதழ்களை கொடுக்க உச்சநீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது. 

திரைக்கலைஞர் ஊர்வசி

எதன் அடிப்படையில் அல்லது அளவுகோல்களின் அடிப்படையில் தேசிய விருது அறிவிக்கப்படுகிறது? நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விருது தேர்வுக் குழு பதிலளிக்க வேண்டும். கிடைப்பதை வாங்கி வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பதற்கு தேசிய விருது ஒன்றும் ஓய்வூதியமல்ல.