காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது
தேர்தல் முறைகேடுகளை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அக்குற்றச்சாட்டுகளை புறக்கணித்து வருகிறார். இதற்கும் நாங்கள் நீதிமன்றத்தையே நாட வேண்டும் என்றால், நீதிமன்றங்களே நாட்டை ஆளட்டும். மோடி அரசு எதற்கு?
சமாஜ்வாதி கட்சி எம்.பி. அவதேஷ் பிரசாத்
உத்தரப்பிரதேச லக்னோவிலுள்ள ககோரி பகுதியில் ராம் பால் பாசி என்கிற தலித் முதியவரை சிறுநீர் குடிக்க வைத்து பாஜக - ஆர்எஸ்எஸ்காரர்கள் அவமதித்திருக்கிறார்கள். வந்தே மாதரம் பாடலின் முக்கியத்துவத்தை பற்றி பேசுபவர்கள், வந்தே மாதரம் பாடல் இந்த சிந்தனையைத் தான் விதைக்கிறதா என சொல்ல வேண்டும்.
ஊடகவியலாளர் டாக்டர் முகேஷ் குமார்
தங்களின் முதலாளிகள் எப்போதுமே அதிகாரத்தில் இருப்பார்கள் என்கிற நம்பிக்கையில் தேர்தல் ஆணையர்கள் இருந்துவிடக் கூடாது. அவர்கள் ஜனநாயகத்தை அழிக்கும், அரசியலமைப்புக்கு எதிராக செயல்படும் குற்றவாளிகள். இந்த நாட்டை சர்வாதிகாரம் மற்றும் பாசிசம் நோக்கி செலுத்திக் கொண்டிருக்கும் மானுட விரோதிகள். நிச்சயம் அவர்களுக்கு தண்டனை உண்டு.
ஊடகவியலாளர் கிருஷ்ண காந்த்
சுதந்திரம் பெற போராடி தியாகம் செய்தவர்களின் பக்கம் நிற்பதா அல்லது அவர்களுக்கு துரோகம் செய்தவர்களின் பக்கம் நிற்பதா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவுதான் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
