திருவனந்தபுரம் இந்தியா முழுவதும் ஒன்றிய அரசும் அதன் கட்டளைக்கு அடிபணியும் காவல்துறை யும் நடத்தி வரும் புல்டோசர் ராஜ்யம், அரசமைப்பு சாசனத்தின் மீதான தாக்குதல் என்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். கேரள சட்டசபை சர்வதேச புத்த கத் திருவிழாவில் ‘புல்டோசர் அரசியலும் இந்திய அரசமைப் பும்’ என்ற தலைப்பில் அவர் பேசி னார். சிறுபான்மையினர் வாழும் இடங்களை நோக்கி ஆளும் கட்சியின் (பாஜகவின்) புல்டோசர்கள் ஓடுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகம் குறிவைக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது. இது ஜஹாங்கிர்புரி, அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் காணப்பட்டது. புல்டோசர் பாஜக மற்றும் ஆர்எஸ் எஸ் வடிவமாகிவிட்டது. புல்டோசர் அரசியல் என்பது ஏழைகளைத் தாக்குவதும் கார்ப்பரேட் நிறுவனங் களைக் காப்பதும் ஆகும். தற்போது புதியவகை சாதி அரசியல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. பல வழிகளில் தீண்டாமையை மீண்டும் கொண்டு வர பாஜகவும் ஆர்எஸ் எஸ்ஸும் முயற்சி செய்கின்றன. ஒன்றிய அரசால் தண்டிக்கப்படும் மாநிலமாக கேரளம் மாறியுள்ளது. இங்குள்ள வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட துறைகளின் சாதனைகளை ஒன்றிய அரசும், பாஜகவும் விரும்பாததே காரணம் என்றும் அவர் கூறினார்.