பீகார்: பத்திரிகையாளர் மாத ஓய்வூதியம் ரூ.15,000
பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அரசு தோல்வி பயத்தால் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பத்திரிகை யாளர்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000 ஆக அறிவித்துள்ளார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார். இது தொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத் தில் அவர் மேலும் கூறுகையில், “பீகார் அரசால் பதிவு செய்துள்ள அங்கீகரிக்கப் பட்ட பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூ தியத் திட்டத்தின், ஓய்வு பெற்ற, தகுதி யுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக் கும் மாத ஓய்வூதியத்தை ரூ.6,000-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்தி வழங்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கூடு தலாக, இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதி யம் பெற்றுவரும் பத்திரிகையாளர் இறக் கும்பட்சத்தில், அவரின் மனைவி அல்லது அவரைச் சார்ந்திருந்த வாரிசுக்கு வாழ் நாள் மாத ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட் டுள்ளது. முன்னர் இந்த வாழ்நாள் ஓய்வூ தியம் ரூ.3,000-ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில், ரூ.10,000-ஆக உயர்த்தப் பட்டுள்ளது” நிதிஷ் குமார் தெரிவித் துள்ளார்.