states

img

பெங்களூரு  கூட்ட நெரிசல் ரூ.25 லட்சம் இழப்பீடு ; ஆர்சிபி அறிவிப்பு

பெங்களூரு  கூட்ட நெரிசல் ரூ.25 லட்சம் இழப்பீடு ; ஆர்சிபி அறிவிப்பு

ஐபிஎல் 18ஆவது சீசனில் ஆர்சிபி அணி முதல் முறையாக சாம்பி யன் பட்டம் வென்றது. இதன் வெற்றி விழா பெங்களூரு சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜூன் 4ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.  இந்நிலையில், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொ டர்பாக ஆர்சிபி நிர்வாகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”ஜூன் 4, 2025 அன்று எங்கள் இதயங்கள் உடைந்தன. ஆர்சிபி குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப் பினர்களை நாங்கள் இழந்தோம். அவர்கள் எங்களின் ஒரு பகுதியாக இருந்தனர். நம் அணியை தனித்துவ மாக்குவதில் நம் நகரம், நம் ரசிகர்கள் ஒரு பகுதியாக உள்ளனர். அவர்கள் இல் லாதது எங்களின் ஒவ்வொரு நினைவு களிலும் எதிரொலிக்கும். கூட்ட நெரிச லில் மகளை பறிகொடுத்த தாயின் கதறல், அவர்களை இழந்து வாடும் குடும் பத்தினருக்கு எந்த ஆதரவு கொடுத்தா லும் அதனை வைத்து அவர்களின் இடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது. இருப்பினும் முதல் படியாக ஆழ்ந்த மரியாதையுடன் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆர்சிபி சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்குகிறோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.