பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் ஜாமியா மிலியா கல்லூரி மாணவர்கள் தில்லியில் உள்ள உத்தரப்பிரதேச பவனுக்கு வெளியே போராட்டம் நடத்தினர். சம்பல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கத்தில் அழைப்பு விடுத்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர். மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி போலீசார்.