போபால் மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்முறை சம்பவங்கள் மிக அதிகமாக நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் தலித், பழங்குடி மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிய பிரச்சனை தொடர்பாக சாதிவெறிக் குண்டர்கள் 8 பேர் தலித் இளைஞரை அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவாலியரைச் சேர்ந்தவர் நாரத் ஜாதவ் (30 வயது). இவர் சிவ்பூரி மாவட்டம் இந்தர்கர் கிராமத்தில் உள்ள தனது மாமா வீட்டுக்குச் சென்றுள்ளார். புதன்கிழமை அன்று தனது மாமாவுக்கு சொந்தமான வயல்களுக்கு நாரத் ஜாதவ் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது வேறு சமூகத்தைச் சேர்ந்த பதம் சிங் தனது குடும்ப உறுப்பினர்களான பெடல் தாகத், ஜஸ்வந்த் தாகத் உள்ளிட்ட 8 பேருடன் இங்கு தண்ணீர் பாய்ச்சக் கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாற, பதம் சிங் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சேர்ந்தவர்கள் இரும்புக் கம்பிகள், மரக்கட்டைகளை வைத்து நாரத் ஜாதவ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் நாரத் ஜாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாரத் ஜாதவின் தந்தை விஷ்ணு அளித்த புகாரின் பேரில் பதம் சிங் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சிவ்பூரி மாவட்ட கண்காணிப்பாளர் அமன் சிங் செய்தி யாளர்களிடம் கூறியுள்ளார். சிபிஎம் கடும் கண்டனம் தலித் இளைஞர் நாரத் ஜாதவ் கொலை க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் சிபிஎம் மத்தி யக்குழு, “மோடியின் புதிய இந்தியா தலித்துக ளுக்கானது அல்ல. பாஜகவின் ராம ராஜ்ஜி யத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை கள் தொடர்கின்றன. தலித்களுக்கு எதிரான சாதி வெறியின் கொடூரமான உண்மை தான் சிவ்பூரி சம்பவம். தலித் மக்கள் மீதான தாக்கு தல் சம்பவங்களை “ஏக் ஹெய்ன் டு சேஃப் ஹெய்ன் (ஒன்றாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்)” என்ற முழக்கம் மூலம் மறைக்க முயல்கிறது பாஜக அரசு” என கூறியுள்ளது.