states

பாஜக ஆளும் ஒடிசாவில் கொடூரம் பழங்குடி பெண் வாயில் மலத்தை திணித்து தாக்குதல்

புவனேஸ்வரம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒடிசா  மாநிலத்தில் முதன்முறையாக பாஜக ஆட்சி யை கைப்பற்றியது. முதல்வராக பழங்குடி யினத்தைச் சேர்ந்த மோகன் சரண் மாஜி உள்ளார். ஒடிசாவில் பழங்குடியினரின் நலனுக்காக மோகன் சரண் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார் என பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர்  பெருமை பேசினர். ஆனால் ஒடிசாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் பழங்குடி யினருக்கு எதிரான வன்முறை மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், ஒடிசாவின் லங்கீர் மாவட்டத்தில் உள்ள ஜுராபந்த் எனும் கிராமத்தில் அபய் பக் எனும் வேறு சமூகத்தை சேர்ந்த நபர், பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு சொந்தமான வயலில் டிராக்டரை ஓட்டி பயிர்களை நாசம் செய்து இருக் கிறார். இச்சம்பவத்தை கண்டித்தும், அபய் பக் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரியும் இளம்பெண்ணும் அவ ரது உறவினர்களும் ஜுராபந்த் சாலையில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இத்தகைய சூழலில் நவ.19ஆம் தேதி அன்று (செவ்வாய்க்கிழமை) வயலை நாசப்படுத்திய சாதி வெறிக் குண்டர்களை கண்டித்து போராட்டம் நடத்திய இளம்பெண் குளத்தில் குளித்துவிட்டு வீடு  திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அபய் பக் இளம்பெண் மீது தாக்குதல் நடத்தி, மான பங்கம் செய்தது மட்டுமல்லாமல் ஆபாசமான வார்த்தைகளால் சாதிய ரீதியாக திட்டியிருக்கிறார். தனது மகளை மீட்க வந்த இளம்பெண்ணின் தாயின்  கழுத்தை பிடித்து நெரித்து அபய் பக் தாக்குதல் நடத்தி யுள்ளார். மேலும்  மனித மலத்தை எடுத்து இளம் பெண்ணின் முகம் முழுவதும் பூசி, அவரது வாயி லும் திணித்திருக்கிறார் அபய் பக். அபய் பக் பாஜகவைச் சேர்ந்தவரா? இதனையடுத்து இளம்பெண் காவல்நிலை யத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்துவதாக மட்டுமே தெரிவித்துள்ளனர். ஆனால் இன்னமும் அபய் பக் கைது செய்யப்படவில்லை.  இதனால் அபய் பக் பாஜகவிற்கு நெருக்கமானவராக இருக்க லாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.