நீர்மூழ்கி கப்பல் குறித்த ரகசியத் தகவல்களை கடத்தப்பட்டதாக கடற்படை அதிகாரி மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் 2 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
கடற்படையின் கிலோ ரக நீர்மூழ்கிகளை நவீனப்படுத்துவது தொடர்பான ரகசிய விவரங்களை வெளியாருக்கு கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் தற்போது பணியில் உள்ள கடற்படை அதிகாரி மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் 2 பேரை சிபிஐ கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் நீர்மூழ்கி கப்பல் குறித்த முக்கிய ராணுவ தகவல்களை அங்கீகாரமில்லாத சிலருக்கு அளித்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சோவியத் ஒன்றியத்திடமிருந்து வாங்கப்பட்ட கிலோ ரக 10 நீர்மூழ்கிகள் நமது கடற்படையால் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன.