states

img

அனில் அம்பானியின் ரூ.3000 கோடி சொத்துக்கள் முடக்கம்

அனில் அம்பானியின் ரூ.3000 கோடி சொத்துக்கள் முடக்கம்

நாட்டின் முன்னணி தொழிலதி பர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி க்குச்  சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவ னங்களுக்கு ‘யெஸ்’  வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கி யது. ஒரு நிறுவனத் தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோத மாக மற்ற நிறுவனங்க ளுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில் அனில் அம்பானி ரூ.17,000 கோடி பண மோசடி செய்து விட்டதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும் சட்டவிரோத பணப்பரி மாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக் கத்துறையும் வழக்குப்பதிவு செய்து, அவரது வீடு அலுவலகம் என 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. சம்மன் காரணமாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது. இந்நிலையில், பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் ரூ.3000 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களில் மும்பையில் உள்ள 66 ஆண்டுகள் பழமை யான அம்பானியின் வீடு மற்றும் அவரது குழும நிறுவனங்களுக்கு சொந்தமான பிற குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்களும் அடங்கும்.