ரூ.500 கோடிக்கு இங்கிலாந்தில் பங்களா வாங்கிய அம்பானி
இங்கிலாந்தின் தலைநகர் லண்ட னின் புறநகர் பகுதியில் உள்ள 300 ஏக்கர் ஸ்டோக் பார்க் தோட்ட பங்களாவை முகேஷ் அம்பானி வாங்கி யுள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க இடமாக அடை யாளப்படுத்தப்படும் இந்த பங்களாவை சுமார் 529 கோடி ரூபாய்க்கு அம்பானி குடும்பம் வாங்கியுள்ளது. இந்த பங்களா ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறு வனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட்மூலம் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1581 ஆம் ஆண்டில் ராணி எலிசபெத் I இன் இல்லமாக ஸ்டோக் பார்க் இருந்தது. பிறகு இந்த பங்களா அரசு இல்லமாகவும், 1908 இல் அரசாங்க கேளிக்கை விடுதி யாகவும் செயல்பட்டது. மேலும் இங்கி லாந்து நாட்டின் சில அரசு நிகழ்வுகளும் இந்த பங்களாவில் நடந்துள்ளன.