states

img

தில்லி வாக்காளர்களுக்கு போர்வைகள், ரூ.1,100 பணம் பாஜக விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு

70 தொகுதிகளைக் கொண்ட தில்லி மாநிலத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்ட மன்ற தேர்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படும் நிலையில், தோல்வி பயத்தால் பணப்பட்டுவாடா, மத வெறியை கிளப்பும் பேச்சு, வாக்கா ளர்களை நீக்குதல், சேர்த்தல் உள்ளிட்ட இழிவான வேலைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பாஜக தில்லி வாக்காளர்களுக்கு போர்வை மற்றும் ரூ.1,100 கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித் கூறுகையில்,”ஞாயிற்றுக்கிழமை இரவு கித்வாய் நகர் சட்டமன்ற தொகுதியின் கிழக்குப் பகுதியில் ஒரு கட்சி (பாஜக) வாக்காளர்களுக்கு போர்வைகள் மற்றும் ரூ.1,100 விநியோகம் செய்தது பற்றி அறிந்தேன். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளேன். பாஜகவினர் இப்படித்தான் தேர்தலில் வெற்றி பெற திட்டமிட் டுள்ளார்கள். பாஜகவிடம் வளர்ச்சிக் கான திட்டங்கள் மற்றும் நேர்மை என்று எதுவும் இல்லை” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.