ரூ.1.25 கோடி இழப்பீடு அறிவித்துவிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டும் ஏர் இந்தியா
பிரிட்டன் சட்ட நிறுவனமான ஸ்டீவர்ட்ஸ் குற்றச்சாட்டு
அகமதாபாத் ஜூன் 12 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்பட்ட டாடா நிறுவனத்துக்குச் சொந்த மான ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்து வக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில், விமா னத்தில் பயணித்த 241 பேர் உள்பட 275 பேர் உயிரி ழந்தனர். 275 பேர் உயிரிழந்தாலும், விமானத்தில் பயணித்த 241 பேருக்கு மட்டுமே ஏர் இந்தியா நிறுவனம் ரூ.1.25 கோடி இழப்பீடு அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும் பத்தினர் இழப்பீடுத் தொகையைப் பெற ஏர் இந்தியா கடுமையான நிபந்தனைகள் விதிப்ப தாக அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட நானாவதி என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் பிரிட்டன் சட்ட நிறுவனமான ஸ்டீவர்ட்ஸ் குற்றம்சாட்டி யுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் கூறுகையில், “பிரிட்டனைச் சேர்ந்த 45-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் இழப்பீடு குறித்து தொடர்பு கொண்டோம். அப்பொழுது விரிவான படிவத்தை முழுமையாக நிரப்பித் தர வேண்டும்; குடும்பத்தின் நிதி சார்ந்த தகவல்களைத் தர வேண்டும்; இல்லையென்றால் இழப்பீடு கிடை யாது என ஏர் இந்தியா நிறுவனம் கூறியது. குறிப்பாக குழப்பங்கள் மூலம் இழப்பீட்டுத் தொகையைக் குறைக்கவும் ஏர் இந்தியா முயற்சிக்கிறது. இழப்பீடு தொகையைப் பெற பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறது. அதேபோல பாதிக்கப்பட்டவர்கள் படிவத்தை நிரப்ப எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் நிரப்ப கட்டாயப்படுத்தப்படுகிறது. முக்கியமாக அதில் உள்ள விதிமுறைகள் சட்ட ரீதியான தாக்கங்கள் குறித்து பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பத்தினர்களிடம் தெரிவிக்கப் படுவதில்லை” என ஸ்டீவர்ட்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த குடிமக்கள் மட்டுமின்றி விமான விபத்தில் பாதிக்கப்பட்ட 241 பேரின் குடும்பத்தினர்களும் ஏர் இந்தியா வின் இழப்பீடு கட்டுப்பாடுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகி யுள்ளது. ஏர் இந்தியா மழுப்பல் ஆனால் ஏர் இந்தியா நிறுவனம் தரப்பில் ஸ்டீவர்ட்ஸ் நிறுவன குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”ஏர் இந்தியா மீது இழப்பீடு தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதார மற்றது மற்றும் தவறானது. பாதிக்கப்பட்ட சில குடும்பத்தினரிடம் மட்டுமே அவர்களது உறவு முறைகள் பற்றி அறியவும், பாதிக்கப் பட்டவர்களுக்கு சரியாக இழப்பீடு சென்று சேர வேண்டும் என்பதற்காகவும் மட்டுமே கூடுதல் தகவல்கள் கேட்கப்படுகிறது. ஆனால் நாங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம், நேரத்தைக் கொடுக்கிறோம்” என அதில் கூறப் பட்டுள்ளது.
34 பேரின் குடும்பத்தினருக்கு யார் இழப்பீடு வழங்குவது?
ஏர் இந்தியா விமான விபத்தில் மொத்தம் 275 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் 241 பேருக்கு (விமானத்தில் பயணித்தவர்கள்) மட்டுமே ரூ.1.25 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும் என்றும், விமானம் விழுந்து நொறுங்கிய பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியும் புதிதாக கட்டித் தரப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஆனால் விமானத்தில் பயணிக்காமல் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் உட்பட 34 பேருக்கு இதுவரை ஏர் இந்தியா இழப்பீடு அறிவிக்கவில்லை. அதே போல குஜராத் பாஜக அரசு மற்றும் ஒன்றிய மோடி அரசு இழப்பீடு பற்றி பேசாமல் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்து வருகிறது.