states

img

ஸ்கேன் இந்தியா

பாஜக அரசுக்கு குட்டு

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஒரு இணை, உயர்நீதிமன்றத்தில் அடைக்கலம் ஆகி யுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது  இளைஞரும், 19 வயது இளம்  பெண்ணும் காதலித்து ஜனவரி 6  அன்று திருமணம் செய்திருக்கி றார்கள். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். உற வினர்களிடமிருந்து மிரட்டல் வந்த தால் காவல்துறையை அணுகி னர். காவல்துறையோ சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக நின்றது. வேறு  வழியில்லாமல் உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டி னார்கள். மாநில பாஜக அரசின் வழக்கறிஞர்களும் திரு மணத்திற்கு எதிராக இருந்தனர். இணையோ உறுதி யாக நின்றது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் காட்டி னார்கள். விருப்பத் திருமண உரிமையைக் காட்டி, அவர்களுக்குப் போதிய பாதுகாப்புத் தருமாறு நிர்வா கத்திற்கும், காவல்துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாருக்கு ஆபத்து? “எ

ப்போதுமே நாட்டை ஆபத்திலேயே காங்கி ரஸ் வைத்துள்ளது” என்று அசாம் முதல மைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறி யுள்ளார். பாஜககாரர்கள் இப்படிச் சொல்வது வழக்கம்தான். ஆனால் இவர், 2001ஆம் ஆண்டில்  காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர். 2002ஆம் ஆண்டிலேயே அமைச்சர் ஆகி விட்டார். 2014ஆம் ஆண்டுவரையில் அமைச்ச ராகத் தொடர்ந்தார். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, வழக்குகளில் சிக்கியபிறகு, 2015இல்  பாஜகவில் இணைந்தார். 2021இல் முதல மைச்சரானார். பதவி கிடைக்கும்போதெல்லாம் காங்கிரஸ் ஆபத்தில் வைத்திருந்தது என்றால், அதற்கு உடந்தையாக இருந்தீர்களா என்று  அவருக்கு கட்சிக்கு உள்ளேயுள்ள எதிர்க் கோஷ்டிகள் கேள்வி எழுப்பியுள்ளன. மோசமான  வார்த்தைகளை அள்ளித் தெளிக்கும் இவர் கட்  சிக்கு ஆபத்தானவராக மாறி வருகிறார் என்று  தில்லித் தலைமையிடம் புகார் சொல்லி வருகிறார்கள். 

ஆர்.என்.ரவி குளறுபடிகள்

நாகாலாந்து விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்பவராக 2014 ஆம் ஆண்டில் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். அதுவரையில் அஜித் லால் என்பவர் செய்து வந்தார். 2021ஆம் ஆண்டு வரையில் தீவிரவாதக் குழுக்களுக்கிடையில் பேசி வந்த ஆர்.என்.ரவி, இடியாப்பச் சிக்கலாக மாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்கள் எழுந்தன.  அதனால் அவர் தமிழ்நாட்டு ஆளுநராக அனுப்  பப்பட்டார். அவரது அணுகுமுறையால் மீண்டும்  பேச்சுவார்த்தைகளே நடக்காத நிலைமை உரு வாகியது. ஐந்தாண்டுகளாக நாகாலாந்து விவ காரத்தில் எந்த நகர்வும் இல்லை. தற்போது  மீண்டும் அஜித் லாலை நியமித்துள்ளார்கள். இவரை அப்போதே நீக்கியிருக்க வேண்டிய தில்லை என்ற கருத்து உருவாகியுள்ளது. ஆறு  ஆண்டுக் காலத்தில் ஆர்.என்.ரவி உருவாக்கிய இடியாப்பச் சிக்கலை அவர் அவிழ்ப்பாரா என்ற  எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

மக்கள் தீர்ப்புக்கு எதிராக...

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் பிவாண்டி-நிஜாம்பூர் மாநகராட்சியில் மொத்தம் 90 வார்டுகள்  உள்ளன. தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 30 வார்டு களில் வெற்றி பெற்றது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 12, சமாஜ்வாதிக் கட்சி 6 இடங்க ளில் வென்றுள்ளதால், இந்த மூன்று கட்சிகளும் இணைந்  தால் பெரும்பான்மை கிடைத்துவிடும். ஆனால், விசா ரணை அமைப்புகளை முடுக்கிவிட்டு கட்சிகளை உடைப்  பது, மிரட்டுவது ஆகிய வேலைகளை பாஜக தொடங்கி விட்டது. கொனாக் விகாஸ் கட்சிக்கு 4 கவுன்சிலர்கள் உள்ளனர். அக்கட்சியின் தலைவர் விலாஸ் பாட்டீலைக்  கைது செய்து ஒரு வழக்கைப் பதிவு செய்திருக்கி றார்கள். பெரும்பான்மை பெறுவதற்கான வேலை களைச் செய்யும் வரையில் மேயர் தேர்தலையும் தள்ளி  வைப்பது என்று முடிவெடுத்துள்ளனர். தங்களையும் பதம் பார்த்து விடுவார்களோ என்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் பதற்றத்தில் உள்ளது.