சத்தீஸ்கரில் 71 நக்சல்கள் சரண்
சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டே வாடா மாவட்டத்தில் 71 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 21 பெண்கள் மற்றும் கூட்டாக தலை க்கு 64 லட்சம் ரூபாய் விலை வைக்கப் பட்டு தேடப்பட்டு வந்த 30 நக்சல்களும் இந்த குழுவுடன் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் 8 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பாமன் மத்காம் என்ற நக்சலும் இதில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சரண டைந்துள்ள நக்சல்களுக்கு மாநில அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு அவர்க ளுக்கு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.