கரூர் துயரம் தலைவர்கள் இரங்கல்
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சா ரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த கோரச் சம்பவத்திற்கு நாடு முழுவ தும் அரசியல் கட்சித் தலைவர்கள் தெரி வித்துள்ளனர். ராகுல் காந்தி (மக்களை எதிர்க்கட்சித் தலைவர்) தமிழ்நாட்டின் கரூரில் நடந்த ஒரு அரசியல் பேரணியில் நடந்த துயர சம்ப வம் மிகவும் வருத்தமளிக்கிறது. இது பல விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்துள் ளது. எனது இதயம் அவர்களின் அன்புக் குரியவர்களுக்காகச் செல்கிறது. மேலும் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். பினராயி விஜயன் (கேரள முதலமைச்சர்) கரூரில் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த துயர சம்பவத்தால் மன வேதனை அடைந் துள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இதயபூர்வமான இரங்கல். இந்த துயரமான நேரத்தில் கேரளம் தமிழ்நாட்டு மக்களுக்கு துணை நிற்கிறது. அகிலேஷ் (சமாஜ்வாதி) தமிழ்நாட்டில் நடந்த துயர சம்ப வத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு பிரார்த்தனை கள் மற்றும் இரங்கல்கள். அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி) கரூரில் ஏற்பட்ட கொடூரமான கூட்ட நெரிசலில், பல அப்பாவி மக்கள் உயி ரிழந்தனர். பெண்கள் மற்றும் குழந்தை களின் மரணம் முழு நாட்டையும் உலுக்கி யுள்ளது. இந்த தாங்க முடியாத துக்கத் தைத் தாங்கும் வலிமையையும் கிடைக்க வேண்டும் என பிராத்திக்கிறேன். சித்தராமையா (கர்நாடக முதலமைச்சர்) தமிழ்நாட்டின் கரூரில் நடந்த பேரணி யில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயி ரிழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்த வர்களின் குடும்பங்களுக்கு எனது மன மார்ந்த இரங்கலையும், காயமடைந்த வர்கள் விரைவில் குணமடைய பிரார்த்த னைகளையும் தெரிவித்துக் கொள்கி றேன். இந்த துயரமான நேரத்தில் கர்நாடகா தமிழக மக்களுடன் ஒற்றுமை யாக நிற்கிறது.