பீகார் தொகுதி பங்கீடு பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு
243 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் இரண்டு கட்டங்க ளாக அடுத்த மாதம் (நவம்பர் 6, 11) சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்த லுக்கான தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. அதன்படி பீகார் பாஜக பொ றுப்பாளர் தர்மேந்திர பிரதான் கூட்டணிக் கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில், ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியு) 108 இடங்களிலும், பாஜக 107 இடங்களிலும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 22 இடங்களிலும், ஹிந்துஸ் தான் அவாமி மோர்ச்சா மற்றும் ராஷ்டி ரிய லோக் சமதா கட்சி தலா 3 இடங்களி லும் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இறுதிப்பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தொகுதி பங்கீட்டில் குறைவான இடங்கள் ஒதுக்கப்பட்டதற்கு ஜேடியு கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், “கடந்த 2020ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 115 இடங்களில் போட்டியிட்ட நாம் இந்த முறை வெறும் 108 இடங்களில் மட்டுமே போட்டியிடு கிறோம். பாஜக கடந்த முறையை காட்டி லும் இம்முறை வெறும் 3 தொகுதிகளை (கடந்த தேர்தலில் 110) மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளது. ஆனால் கடந்த முறை 115 இடங்களில் போட்டியிட்ட நாம் இம் முறை 8 இடங்களை இழந்துள்ளோம். இது நமது கட்சியின் செல்வாக்கை குறைக்கும்” என எச்சரித்துள்ளனர். ஜேடியு நிர்வாகிகளின் எதிர்ப்பு பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.