மியான்மரில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு
மியான்மர் – தாய்லாந்து எல்லை யில் அமைந்துள்ள சைபர் குற்ற மையங்களில் இருந்து விடுவிக்கப் பட்ட 549 இந்தியர் கள், 2 ராணுவ விமா னங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்தியாவில் நிலவி வரும் வேலை யின்மை, வறுமை யால் தொழில்நுட் பம், அறிவியல் துறைகளில் படித்த லட்சக் கணக்கான இளைஞர்கள் வெளிநாடுக ளுக்கு வேலை தேடி செல்கின்றனர். இவர்களை குறிவைக்கும் பல மோசடி கும்பல்கள் ஐடி துறையில் வேலைகள் வாங்கித் தருவதாக ‘ஏஜெண்டுகள்’ மூலம் லட்சகணக்கான ரூபாய்களை வாங்கிக்கொண்டு வாக்குறுதி கொடுக் கின்றனர். இவ்வாறு கடந்த 3 ஆண்டு களில் மட்டும் கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இதுபோன்ற மோசடி கும்பல்களால் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் கட்டாய சைபர் குற்றத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.