54 பள்ளிகள் மூடல் ; ஒரே அறையுடன் 341 பள்ளிகள் ; ஒரே ஒரு ஆசிரியருடன் 1,606 பள்ளிகள் ரூ.60,000 கோடியை ஏப்பம் விட்ட குஜராத் பாஜக அரசு
பாஜக ஆளும் குஜராத் மாநில த்தில் பள்ளிகள் மூடப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ கிரீத் படேல் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு அறிக்கை மூலம் அம்மாநில கல்வித் துறை அமைச்சர் பிரபுல் பன்ஷரியா பதிலளித்தார். அதில், குஜராத் மாநிலத்தில் மாண வர்கள் இல்லாததால் 54 பள்ளிகள் மூடப் பட்டுள்ளன. துவாரகா மாவட்டத்தில் 9 பள்ளி களும், ஆரவல்லி (7), அம்ரெலி (6), போர்பந்தர் (6), ஜுனாகத் (4) மற்றும் சோட்டா உதய்ப்பூர், கட்ச், ராஜ்கோட்டில் தலா 3 பள்ளிகளும், கேதா, ஜாம்நகர், நவசரி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பள்ளிகளும், பாவ்நகர், டங், கிர் சோம்நாத், மகசனா, பஞ்சமஹால், சூரத், சுரேந்திரநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பள்ளி என 54 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 341 பள்ளிகள் ஒரே அறையில் செயல்பட்டு வருகிறது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மொத்த முள்ள 32,000 பள்ளிகளில் 1,606 பள்ளிகள் வெறும் ஒரே ஒரு ஆசிரியருடன் செயல்பட்டு வருகின்றன. 78 அரசுப் பள்ளிகள், 315 அரசு உதவிபெறும் பள்ளிகள், 255 தனியார் பள்ளிகள் என 648 பள்ளிகள் விளையாட்டு மைதானங்கள் இன்றி இயங்கி வருகின்றன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. ரூ.60,000 கோடி எங்கே? 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காங்கிரஸ் எம்எல்ஏ ஷைலேஷ் பார்மரின் கேள்விக்கு பதிலளித்த குஜராத் பாஜக அரசு 341 பள்ளிகள் வெறும் ஒரேயொரு வகுப்பறை யுடன் செயல்படுகிறது எனக் கூறியது. ஆனால் 2025ஆம் ஆண்டு வரை அதே 341 பள்ளிகள் ஒரே ஒரு வகுப்பறையுடன் தான் செயல்பட்டு வருகின்றதாக பாஜக அரசு மீண்டும் கூறியுள்ளது. கடந்த வருடம் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனாலும் மாநிலத்தின் கல்வி நிலைமை மிக மோசமாக மாறி வரும் நிலையில், ரூ.60,000 கோடி நிதி என்ன ஆனது? எந்த காரணத்திற்கு அவை செலவழிக்கப்பட்டன? ரூ.60,000 கோடியை குஜராத் பாஜக அரசு ஏப்பம் விட்டதா? என எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளன.