states

img

அபுதாபியில் ஏவுகணை தாக்குதல் 5 இந்தியர்கள் படுகாயம்

அபுதாபியில் ஏவுகணை தாக்குதல் 5 இந்தியர்கள் படுகாயம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இந்திய நேரப்படி வெள்ளியன்று காலை,”ஈரானின் எஃகு  உற்பத்தித் திறனில் சுமார் 70 சதவீதத்தை அழித்துள்ளோம். இது ஆயுதங்களைத் தயாரிக்கும் ஈரானின் திறனைப் பெருமளவு முடக்கியுள்ளது” என்று கூறினார். அடுத்த அரை மணிநேரத்தில் ஈரான் ராணுவம், இஸ்ரேல் மற்றும் சில வளைகுடா நாடுகள் மீது அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசித் தாக்கியது. இதில் குவைத்தில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீப்பற்றியது. குறிப் பாக, அபுதாபி நகரம் மீது ஈரான் வீசிய ஏவுகணைகளை இடைமறித்த போது, அதன் சிதறல்கள் விழுந்ததில் 12 பேர் படுகாயமடைந்தனர். இதில் 5 இந்தியர்க ளும், 7 நேபாளிகளும் அடங்குவர். ஒரு நேபா ளியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.  கச்சா எண்ணெய் விலை போர் நீடிப்பதன் காரணமாக கச்சா  எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள் ளது. அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 11.4% உயர்ந்து ஒரு பேரல் 111.54 டாலராக வும், ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 7.8% உயர்ந்து 109.03 டாலராக வும் உள்ளது.