states

img

கும்பமேளாவில் நெரிசல் : 40 பேர் பலியான துயரம்

அலகாபாத், ஜன. 29 - உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புதனன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40  பேர் பலியான துயரம் அரங்கேறியுள்ளது. மேலும், 200-க்கும் மேற் பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதன் கிழமை இரவு 7 மணி வரை 40 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், உ.பி., காவல்துறை 30 பேர்  மட்டுமே பலியானதாக கூறியது. பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலம் அலகாபாத்தின் (பிரயாக்ராஜ்) திரிவேணி சங்கமத்தில் (கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் இணையும் இடம்) 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்ப மேளா விழா ஜனவரி 13 இன்று தொடங்கியது. மொத்தம் 45  நாட்கள் நடக்கும் இந்த கும்ப மேளாவின் முக்கிய நிகழ்வான மவுனி அமாவாசை புதனன்று கொண்டாடப்பட்டது.  

இந்த மவுனி அமாவாசை நாளன்று திரிவேணி சங்கமத்தில் நீராடுவது புண்ணியம் என்ற ஐதீகத்தின் காரணமாக, செவ்வா யன்று இரவு அலகாபாத்தில் மக்கள் குவியத் துவங்கினர். இவர்கள் அனைவரும் புதன் கிழமை அதிகாலை 1:30 மணியள வில் விரைந்து நீராட வேண்டும் என்ற ஆர்வத்தில், பெருங்கூட்ட மாக முந்திக்கொண்டு சென்ற னர். திரிவேணி சங்கமத்தின் முன்பு தடுப்புகளை தாண்டி முன் னேறிச் சென்றனர். அப்போது  திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட் டது. பலர் கீழே விழுந்தும், முந்திச் சென்றவர்களால் மிதிபட்டு  படுகாயமடைந்தும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதலில் 15 பேர் மட்டுமே உயிரிழந்ததாகவும், காய மடைந்த 200க்கும் மேற்பட்டோ ர்கள் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ள தாகவும், பலரது நிலைமை கவலைக்கிட மாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், காலை 11:30 மணி அளவில் இந்த எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.  எனினும் 40 பேர் வரை பலியாகியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிர்வாக குளறுபடிகளே காரணம் கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பாக சமாஜ்வாதி கட்சி  தலைவர் அகிலேஷ் வெளியிட்ட அறிக்கையில், “உத்தரப்பிரதேச மாநிலம் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலுக்கு நிர்வாக குளறுபடிகளே முக் கிய காரணம் ஆகும். கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்” என அவர் கூறினார். மறுபுறத்தில் விஐபி தரிசனத்திற்கு முன்னுரிமை அளித்ததன் காரணமாகவே கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக நெரிசலில் தப்பி உயிர்பிழைத்த பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிபிஎம் இரங்கல்

கும்பமேளா கோர விபத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தது  அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த விபத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை இழந்து வாடுபவர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது” என்று தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை கும்பமேளா கோர விபத்து முழுமையாக அம்பலப்படுத்துகிறது” எனவும் குற்றம்சாட்டியுள்ளது.