states

img

மகாராஷ்டிராவில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ‘எதிர்கால விவசாயம்’

மும்பை மகாராஷ்டிராவின் பாராமதி பகுதியில் செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்ப உதவியுடன் விவசாயிகள் கரும்பு விவ சாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது நல்ல பலனை கொடுப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். பாராமதி வேளாண் மேம்பாட்டு அறக்கட்டளையில் உள்ள விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கரும்பு விவசாயிகளுக்கு வேண்டிய தகவலை அளித்து வருகின்றனர்.  உயரமான கோபுரம் அமைக்கப்பட்டு சென்சார்கள் பொருத்தப்பட்டு காற்று, மழை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் ஆகியவை அளவிடப்படுகின்றது. அதே போல மண்ணுக்கு அடியிலும் சென்சார்கள் பொருத்தப்பட்டு  மண்ணின் ஈரப்பதம், அமிலத்தன்மை, ஊட்டச்சத்து ஆகியவற்றை அளவிட்டு விவசா யம் செய்ய திட்டமிட  தேவையான தகவல் எடுக்கப்படுகின்றது.  இந்த தகவல்கள் செயற்கைக்கோள் மற்றும் டிரோன் படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பெறப் படும் தகவல்கள் விவசாயிகளுக்கு செல்போன் செயலி வழி யாக தெரிவிக்கப்படுகின்றன. அதிக தண்ணீர் பாய்ச்சுவது, உரம் போடுவது, பூச்சிகள் தாக்கத்தை பரிசோதனை செய்வது போன்ற தகவல்கள் விவ சாயிகளுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் இந்தத் தகவல்கள் ஆராயப்பட்டு விவசாயிகளுக்கு கொடுக்கப்படுகிறது என்பதுதான் முக்கியமான விஷயமாக உள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில் விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் அறுவடைக்காலத்தில் நல்ல விளைச்சலை பெறுகின்றனர். கடந்த ஆண்டுகளில்  நடத்தப்பட்ட பரிசோதனையில் அறுவடை நேரத்தில் கரும்பு  30 முதல் 40 சதவீதம்  கூடுதலான எடையுடனும்,  20 சதவீத கூடுதலான சுக்ரோசுடனும்  இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளும் கரும்பு விவசாயத்துக்கு போதுமான அளவு மட்டுமே  தண்ணீர், உரம் செலவாகிறது. இதனால் உரம், மின்சாரம்  வீணாவது கட்டுப்படுத்தப்படுவதுடன், ஒரே வருடத்தில் நோய் தாக்குதல் இன்றி  கரும்பு நன்கு வளர்ச்சியடைந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘எதிர்கால விவசாயம்’ என்ற பெயரில் செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் , விவசா யத்தில் கரும்பு மட்டும் இன்றி  தக்காளி உட்பட பல பயிர்களின் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுவது  குறிப்பிடத்தக்கதாகும்.