states

img

ஈஸ்ட்கோர்ட்டின் அமலாக்கப் பணியக இயக்குநர், சி.பி.ஐ நிர்மலா சீதாராமனுக்கு எதிரான பிர்

பெங்களூரு, செப்.28- தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தது தொடர்பான குற்றச்சாட்டில், ஒன்றிய நிதியமைச்சர் நிர் மலா சீதாராமன் உள்பட சம்  பந்தப்பட்ட பாஜகவினர் மீது  எப்.ஐ.ஆர். பதிவு செய்யு மாறு பெங்களூரு சிறப்பு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, சிபிஐ, அம லாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப் புக்களை வைத்து மிரட்டி, தேர்  தல் பத்திரம் மூலம் பாஜக வினர் பணம் வசூல் செய்திருப் பதாக ஜனதிகர் சங்கர்சா பரி ஷத் (ஜேஎஸ்பி) அமைப்பு, கடந்த ஏப்ரல் மாதத்தில் புகார் அளித்தது.

“தேர்தல் பத்திரத்தை நடை முறைப்படுத்த ஒன்றிய நிதி  அமைச்சகம் தான் முக்கிய காரணம். தேர்தல் பத்திர நடை முறையை கொண்டு வந்தது ஒன்றிய நிதி அமைச்சகம் தான். இதனால் தேர்தல் பத்திர  முறைகேடு தொடர்பாக ஒன்  றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன், அமலாக்கத்துறை, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, கர்நாடகா பாஜக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல்,  தற்போதைய பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா ஆகி யோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என ஜனதி கர் சங்கர்சா பரிஷத் (ஜேஎஸ்பி)  இணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர், பெங்களூருவில் உள்ள  எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக் கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

இந்தப் புகார் விசார ணைக்கு வந்தபோது, மனு தாரர் ஆதர்ஷ் ஐயர் சார்பில்  மூத்த வழக்கறிஞர் பாலன் வாதிட்டார். அதைத் தொட ர்ந்து, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது, தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததற்காக எப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு பெங்களூருவில் உள்ள திலக் நகர் காவல் நிலையத்திற்கு சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. வழக்கின்  அடுத்தகட்ட விசாரணையை யும் அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.