states

img

ரூ.50 கோடி கேட்டு மிரட்டினார் குமாரசாமி மீது தொழிலதிபர் காவல்துறையில் புகார்

பெங்களூரு தாசர ஹள்ளியில் வசித்துவருபவர் தொழிலதிபர் விஜய் டாடா என்பவர் சென்னபட்னா இடைத்தேர்தல் செலவுக்கு குமார சாமி தன்னிடம் ரூ.50 கோடி தரும்படி மிரட்டியதாக பெங்களூரு அமிர்த ஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

தொழிலதிபர் விஜய் டாடா 2018 முதல் மஜத கட்சியிலும் இருந்துவரும் நிலையில், அவர் அளித்த புகாரில், ‘முன்னாள் மேலவை உறுப்பினர் ரமேஷ்  கவுடா கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி  இரவு 10 மணிக்கு தனது வீட்டிற்கு வந்த தாகவும், சென்னபட்னா இடைத்தேர்த லில் குமாரசாமியின் மகன் நிகில் குமார சாமிக்கு சீட் கிடைப்பது உறுதியாகிவிட்ட தாகவும் கூறினார். இதனைத்தொடர்ந்து, அவரே குமாரசாமிக்கு போன் செய்து என்னிடம் கொடுத்தபோது, தேர்தல் செல வுக்கு ரூ.50 கோடி தருமாறு குமாரசாமி என்னிடம் கேட்டார். அவ்வளவு பணம்  இல்லை என்று கூறியதற்கு, தன்னை குமாரசாமி மிரட்டினார் என்று குறிப் பிட்டுள்ளார். மேலும், கோவில் மற்றும் பள்ளிக்கூடம் கட்டவேண்டும் என்றும், அதற்கு தனியாக ரூ.5 கோடி கேட்டும் மிரட்டினார் என்று விஜய் டாடா புகார் அளித்தார். தொழிலதிபர் விஜய் டாடாவின் புகாரைப் பெற்றுக் கொண்ட அமிர்தஹள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.