பெங்களூரு:
பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில், கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகளை ஒதுக்குவதில் ஊழல் நடப்பதாக- பாஜக எம்.பி. ஒருவரே பகிரங்கமாக குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா 2-ஆம் அலையின் தாக்கம் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளது.இந்நிலையில்தான் பெங்களூரு தெற்குத் தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா,கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் இடம் அளிப்பதில் பெரும் ஊழல் நடந்து வருகிறது என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித் துள்ள தேஜஸ்வி சூர்யா, தனது குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அரசு சார்பில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற,3 நோயாளிகளிடம் லஞ்சம் பெறப்பட் டுள்ளது என்று குறிப்பிட்டு குற்றம் சாட்டியுள்ளார்.இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட2 இடைத்தரகர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களும், 20 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கொரோனா நோயாளிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு படுக்கைவசதிகள் செய்து கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.