states

img

முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா பேச்சு முப்தி முகமதுவின் ஒற்றைத் தவறால் காஷ்மீருக்குள் பாஜக வந்து விட்டது!

ஸ்ரீநகர், டிச.1- காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத்தின் ஒற்றை தவறான முடிவு, சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு கார ணமாகி விட்டதாக தேசிய மாநாட்டு கட்சி யின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.  காஷ்மீரின் தொடா மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் உமர் அப்துல்லா இதுதொடர்பாக மேலும் பேசியிருப்பதாவது: நமது பலவீனத்தை பாஜக பயன் படுத்திக்கொண்டது. எனக்கு அது தெரி யும். 2014 தேர்தலுக்கு பின்னர் பாஜக ஆதரவுடன் காஷ்மீரில் ஆட்சியமைக்க முடிவு செய்திருப்பது குறித்து முப்தி முகமது சயீத்திடம் எச்சரித்தேன்.  பாஜகவுடன் கூட்டணி அமைப்பது, ஜம்மு - காஷ்மீருக்கு ஆபத்தானது என முப்தி முகமதுவை நான் எச்சரித்தேன். உங்கள் முடிவால் நாம் பாதிக்கக்கூடும் என கூறினேன். வேண்டுமானால் நாங் கள் கூட (தேசிய மாநாட்டு கட்சி) உங் களை ஆதரிக்கிறோம். தயவுசெய்து காஷ்மீருக்கு பாஜகவை கொண்டு வராதீர்கள் என கூறினேன்.

ஆனால், அவருக்கு அந்த சமயத்தில் சில நிர்ப்பந்தங்கள் இருந்தன.  தற்போது சயீத்தின் அந்த ஒற்றைத் தவறான முடிவால் நாம் இன்னும் எவ்வ ளவு நாட்களுக்கு தண்டிக்கப்படப் போகி றோம் என்று தெரியவில்லை. பாஜக வுடன் கூட்டணி என்ற முப்தி முகமது சயீத்தின் ஒற்றை தவறான முடிவு சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு வழிவகுத்து விட்டது. இவ்வாறு உமர் அப்துல்லா கூறி யுள்ளார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் 2015-ஆம் ஆண்டு தேர்த லின்போது, முப்தி முகமது சயீத் தலை மையிலான மக்கள் ஜனநாயக கட்சி, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து காஷ்மீரில் ஆட்சியமைத்தது. முப்தி முகமது சயீத் முதல்வர் ஆனார்.

ஆனால், ஓராண்டுக்கு உள்ளேயே 2016 ஆம் ஆண்டு அவர் இறந்து போனார். சயீத்திற்குப் பதில் அவரது மகள் மெகபூபா முப்தி காஷ்மீர் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், 2018-ஆம் ஆண்டு அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திடீரென விலக்கிக் கொண்டது. மெகபூபா ஆட்சி யை கவிழ்த்தது மட்டுமன்றி, காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தி, அதன் பின்னர் 2019 ஆகஸ்டில் காஷ்மீருக் கான சிறப்பு அந்தஸ்து பிரிவு 370-ஐ ஒன்றிய அரசு ரத்து செய்தது. அத்துடன் மாநில அந்தஸ்தை பறித்து, 2 யூனி யன் பிரதேசங்களாக மாற்றியது. இதனைக் குறிப்பிட்டே முப்தி முக மது சயீத்-தின் ஒற்றைத் தவறு காஷ்மீரை சின்னபின்னமாக்கி விட்ட தாக உமர் அப்துல்லா கூறியுள்ளார்.