லக்னோ, டிச.16- லக்கிம்பூர் கெரி படுகொலை குறித்து கேள்வி எழுப்பிய செய்தி யாளரை, ஒன்றிய உள்துறை இணை யமைச்சர் அஜய் மிஸ்ரா, தரக் குறைவான வார்த்தைகளால் திட்டியதுடன், அவரைத் தள்ளியும் விட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத் தில் நடந்துள்ளது. அக்டோபர் 3-ஆம் தேதி லக் கிம்பூர் கெரியில் விவசாயிகள் கொல்லப்பட்டது “திட்டமிட்ட சதி” என்று சிறப்பு புலனாய்வுக் குழு அண்மையில் அறிக்கை வெளியிட் டது. ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா வின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, கொலை செய்யும் நோக்கத்துடன் வாக னத்தை ஓட்டியதாலேயே விவ சாயிகள் கொல்லப்பட்டதாகவும், அது அலட்சியத்தால் ஏற்பட்ட மர ணம் அல்ல! என அந்த அறிக்கையில் சிறப்பு புலனாய்வுக்குழு கூறியிருந்தது. மேலும், ஆசிஷ் மிஸ்ரா உள் ளிட்ட 13 பேர் மீதான வழக்கை கொலை முயற்சி மற்றும் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தினார் என்ற பிரிவுகளில் சேர்க்க வேண் டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
இதனடிப்படையில், ஆசிஷ் மிஸ்ரா மீதான விசாரணையில் குறுக்கீடுகள் இல்லாமலிருக்க, அவரது தந்தை அஜய் மிஸ்ரா ஒன்றிய உள்துறை இணையமைச் சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், லக்கிம்பூர் ஆக் சிஜன் ஆலை திறப்பு விழாவில் அமைச்சர் அஜய் மிஸ்ரா கலந்து கொண்ட நிலையில், அவரிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவின் குற் றச்சாட்டுக்கள் குறித்து செய்தியா ளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது மிகவும் கோபம டைந்த ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா, அந்த செய்தியாளரை தள்ளிவிட்டதுடன், அவரிடம் இருந்த மைக்கையும் பிடுங்கி வீசியுள்ளார். மேலும் “முட்டாள்தனமாக எதை யாவது கேட்க வேண்டாம்... உனக் கென்ன பைத்தியமா? ஒரு அப்பா வியை சிறைக்கு அனுப்பியதற் காக நீங்கள் வெட்கப்பட வேண் டாமா..? திருட்டுப்பயல்களே!’ என்று தரக்குறைவான வார்த்தை களால் கண்டபடி திட்டித் தீர்த்துள் ளார். காவல்துறையினர் தடுத்த பிறகே சமாதானம் அடைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.