states

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றாலும் விடுப்பு வழங்க வேண்டும்

ரா ஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த  பெண் ஒருவர் வாடகைத்தாய் மூலம் தான் பெற்ற இரட்டைக் குழந்தைகளை பராமரிப்பதற்காக மருத்துவ விடுப்பு கோரினார். ஆனால் மாநில அரசு மறுப்பு தெரிவிக்கவே அப்  பெண் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற உதவி யை நாடினார்.

இந்த வழக்கை வியாழனன்று விசா ரணைக்கு எடுத்த ராஜஸ்தான் நீதி மன்றம், “அரசியலமைப்புச் சட்டம் பிரிவு  21 தாய்மைக்கான உரிமை மற்றும் ஒவ்வொரு குழந்தையின் முழு வளர்ச்சிக்  கான உரிமை ஆகியவற்றை உள்ளடக்கி யது. தத்தெடுக்கும் தாய்க்கு அரசு மகப்  பேறு விடுப்பு வழங்கும்போது, வாட கைத்தாய் மூலம் குழந்தை பெற்ற தாய்க்கு விடுப்பு வழங்க மறுப்பது முறையற்றது. இயற்கையான உயிரியல் தாய்க்கும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்க்கும் இடையே வித்தியாசம் காட்டுவது தாய்  மையை அவமதிப்பதாகும். இதனால்  மகப்பேறு விடுப்பினை மறுக்கக்கூடாது” என ராஜஸ்தான் அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.