ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் அண்மையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக வெற்றிபெற்றதாக கூறப்பட்டது.இந்நிலையில், அதே ராஜஸ்தானில்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தலில் பாஜக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.ராஜஸ்தானில் 12 மாவட்டங்களுக்கு உட்பட்ட 50 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் 1775 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல்நடைபெற்றது. இதற்காக, 2 ஆயிரத்து 622 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரம்பேர் வாக்களித்தனர்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில், 1,775 வார்டு கவுன்சிலர் பதவிகளில் ஆளும் காங்கிரஸ் 620 இடங்களில் வென்று முதலிடம் பிடித்துள்ளது. பாஜக-வுக்கு 548இடங்களே கிடைத்துள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம்என்னவெனில், பாஜக வென்ற இடங்களைக் காட்டிலும், அதிகமான இடங்களை சுயேட்சை வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். அவர்கள் 595 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.