states

img

மேற்குவங்கத்தில் ரயில்கள் மோதல் 15 பேர் பலி; 60 பேர் காயம்

டார்ஜிலிங், ஜூன் 17- மேற்குவங்க மாநிலத்தில் பயணி கள் - சரக்கு ரயில் மோதிய விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

அசாமின் சில்சாரில் இருந்து மேற்குவங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டி ருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் பய ணிகள் ரயில் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் பனிஷ்தேவா பகுதியில் வந்த பொழுது பின்னால் வந்த சரக்கு ரயில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது திங்களன்று காலை 9 மணியளவில் மோதியது. இதில் கஞ்சன்ஜங்கா ரயிலின் 3-ல் 5 பெட்டிகள் வரை சேதமடைந்த நிலை யில், கஞ்சன்ஜங்கா ரயிலின் 3 பெட்டி கள் அந்தரத்தில் பறந்தது. 

இந்த கோர விபத்தில் 15 பேர்  உயிரிழந்த நிலையில்,  60 பேர் காயங்களுடன் மருத்துவமனை களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

விபத்துப் பகுதிக்கு விரைந்து நேரில் ஆய்வு மேற்கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  “மீட்புப் பணிகளை முடுக்கிவிட வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், “ரயில் விபத்தில் உயிரி ழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயம் அடைந் தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்படும்” என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் ரயில் விபத்து குறித்து பிரத மர் மோடி, குடியரசு தலைவர் ஆகி யோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.