states

img

முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்!

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்.

மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா (80) நீண்ட நாட்களாக நுரையீரல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரான பட்டாச்சார்யா, நவம்பர் 2000 முதல் மே 2011 வரை முதலமைச்சராக இருந்தார்.