states

2 மாதத்தில் 83 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்த அதானி, அம்பானி!

மும்பை, பிப். 24 - இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் களாக அறியப்படும் முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி ஆகியோர், நடப்பு 2023-ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் பிப்ர வரி 23 வரையிலான 54 நாட்களில் மட்டும்  சுமார் 83 பில்லியன் டாலர்களை (6 லட்சத்து 80 ஆயிரத்து 600 கோடி ரூபாயை) தங்கள் சொத்து மதிப்பில் இருந்து இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஒன்றிய பாஜக அரசின் செல்லப்பிள்ளை யாக வலம் வந்தவர் கவுதம் அதானி. 60 வய தாகும் இவர், குறுகிய காலத்தில் துறை முகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி,  மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான கேந்திரமான தொழில்கள் அனைத்தையும் கைப்பற்றி நடத்தி வந்தார்.

இந்நிலையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடு பட்டு வருகிறது என்றும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியான பின்னணியில், அதானி குழும நிறுவனங்கள் பலத்த சேதத்தைச் சந்தித்து வருகின்றன. தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு 42.7 பில்லி யன் டாலர்கள் அளவிற்கு இறங்கியுள்ளது.  கடந்த ஜனவரி 24-ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 23 வரையிலான ஒரு மாதத்தில் தனது சொத்து மதிப்பில் சுமார் 64 சதவிகிதத்தை அதானி இழந்துள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. அவரது மொத்த சொத்து  மதிப்பில் சுமார் 78 பில்லியன் டாலர்களை (சுமார் 6 லட்சத்து 39 ஆயிரத்து 600 கோடி ரூபாயை) அவர் இதுவரையில் இழந்துள்ளார். இதேபோல பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம் மற்றும் ரீடெயில் தொழில்களில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியும், அவரது மொத்த சொத்து மதிப்பில் 5 பில்லியன் டாலர்களை (சுமார் 41 ஆயிரம் கோடி ரூபாயை) இழந்துள்ளார். தற்போது அவரது சொத்து மதிப்பு 81.5 பில்லியன் டாலர் களாக (சுமார் 6 லட்சத்து 68 ஆயிரத்து 300  கோடி ரூபாயாக) உள்ளது.  உலக பணக் காரர்கள் பட்டியலில் 12-ஆவது இடத்தில் உள்ளார். அதானி, அம்பானி தவிர, ‘டி- மார்ட்’ தலைவர் ராதாகிஷன் தமானியின் நிகர சொத்து மதிப்பும் 253 கோடி டாலர் சரிந்து 1,680 கோடி டாலராகி உள்ளது.