states

img

மதவெறி கலவரக் கும்பல்களிடம் ‘போலீஸ் அதிகாரம்’!

போபால், ஜூலை 3 - மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) சட்டம், ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியதை தடுத்ததற்காக 24 மணி நேரத்திற்குள், ஐபிஎஸ் அதிகாரி உட்பட இரண்டு காவல்துறையினரை இடமாற்றம் செய்துள்ளது மாநில பாஜக அரசு.  ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கிளை அமைப்பு களான பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத்  உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்கும் போது, ஆர்எஸ்எஸ்-சின் அரசியல் அமைப்பான பாஜக, அங்கு  ஜனநாயகத்தை கொலை செய்து அந்த அமைப்புகளை பாதுகாக்கும் வேலையை தலையாய கடமையாக செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத், இந்தூரில் உள்ள பலாசியா காவல் நிலையத்தில்  தங்கள் ஊழியர் ஒருவர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று பரபரப்பான பலாசியா சதுக்கத்தை முற்றுகையிட்டு பதற்றத்தை உருவாக்கினர். இதனை தொடர்ந்து  சில போராட்டக்காரர்களை போலீசார்  கைது செய்தனர்.

இந்த கைது சம்பவத்தை தொடர்ந்து கல வரத்தை ஏற்படுத்துவதற்காக சங்பரிவார் அமைப்புகள் காவலர்கள் மீது கற்களை வீசத் தொடங்கி கலவரத்தை உருவாக்கினர். அதைத் தொடர்ந்து பாஜக அரசுக்கு வரும் தேர்தலில் ஆதரவு தரமாட்டோம் என்று கோஷங்களை எழுப்பி ஒரு புதிய நாடகத்தை நடத்தினர்.அந்த  வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, காவல் உதவி ஆணையராக இருந்த படோரியா என்ற அதிகாரியை, ருஸ்டோம்ஜி ஆயுதக் காவல் பயிற்சிக் கல்லூரிக்கும், பலா சியா காவல் நிலைய ஆய்வாளரை போலீஸ் லை னிற்கும் இடமாற்றம் செய்து மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா உத்தரவிட்டார். கலவரம் செய்த சங்பரிவார் அமைப்புகள்  மீது  சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்காக  நட வடிக்கை எடுத்த அதிகாரிகளை  சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று இந்த அமைப்புகள் தற்போது அழுத்தம் கொடுத்து வருகின்றன.  அரசியல் ஆதாயத்திற்காக அதிகாரிகளுக்கு எதிராக அரசு எடுக்கும் இத்தகைய  நடவடிக்கை கள் காவலர்களின் மன உறுதியைக் குலைக் கிறது எனவும், வன்முறைக் குழுக்களுக்கு பாஜக அரசு பக்க பலமாக இருக்கிறது என காவல் துறை வட்டாரங்களே குற்றம்சாட்டுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், மத்தியப்பிர தேச காவல்துறைக்கும் சங்பரிவார்  அமைப்பு ளுக்கும் இடையே பல மோதல்கள் நடந்துள்ளன; இந்த  எல்லா மோதல்களிலும், சங்பரிவார் கலவர குழுக்களுக்கே காவல் துறையை விட அதிக அதிகாரத்தை பாஜக அரசு கொடுத்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக, இத்தகைய தொடர் சம்பவங்களைக் காணலாம்.

ஆகஸ்ட் 25, 2021 அன்று இந்தூரில் ஒரு  இந்துத்துவ வெறிக்கும்பல், முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த வளையல் விற்பனையாளர் ஒருவரை தாக்கிய போது, ​​தாக்கியவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக,  காவல்துறை, அந்த  வளையல் விற்பனையாளரை பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டின் கீழ் பொய்வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரமாக விடப் பட்டனர். நவம்பர் 1, 2021 அன்று, தேவாலயத்தில் பிரார்த்தனைக்காக  கூடியிருந்த கிறிஸ்தவர்கள் மீது மதமாற்றச் சட்டத்தின் கீழ், பொய் வழக்குப் பதிவு செய்யும்படி விஎச்பி மற்றும் பஜ்ரங் தள ஆட்கள், சத்னா மாவட்டத்தில் கொல்கான் காவல் நிலைய அதிகாரிகளை மிரட்டியுள்ளனர். இந்துத்துவாதிகளின் திட்டத்தை புரிந்து கொண்ட ​​ போலீசார், வழக்குப்பதிவு செய்ய மறுத்து விட்டனர். காவல் துறையினரை போலி வழக்குப் பதிவு செய்ய வைப்பதற்காக  அன்று மதியம்  காவல்நிலையத்திற்கு வெளியே  பஜ்ரங்  தள ஆட்கள் கூடி, சாலையை மறித்து போராட்டத் தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, ​​பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ஒருவர் கர்ப்பிணியாக இருந்த  காவலர் ஒருவரின்  வயிற்றில் அடித்தார்; இது  காவல்துறையினரை  தடியடி செய்யத் தூண்டி யது.  

இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையை மறைத்து வீடியோக்களை வைரலாக்கி, பாதிரி யார்  பிஜூ தாமஸ், சந்தோஷ் தாமஸ் உடன்  மூன்று  பேர் மீது மதமாற்றம் மற்றும் 7 பேர் மீது மத்தி யப் பிரதேச மத சுதந்திரச் சட்டப்பிரிவு 3 மற்றும் 5ன் கீழ் போலீசார் இரண்டு வழக்குப் பதிவு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்; மேலும்  பிரவீன் திவாரி, தேவேந்திர சென் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். 2021 டிசம்பரில், விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, ​​பஜ்ரங்  தள் ஆட்கள் தாக்குதல் நடத்தினர். அப்போதும், அரசாங்கம் சங்பரிவாருக்கே ஆதரவாக இருந்தது. தாக்குதல்  நடந்து 18 மாதங்கள் ஆன பிறகும், யாரும் கைது செய்யப்படவில்லை. மே 2, 2022 அன்று, சியோனி மாவட்டத்தில், பசுவை கடத்தியதாக கூறி 14 பஜ்ரங் தளக் குண்டர்கள்  இரண்டு பழங்குடியினரை அடித்தே  கொலை செய்தனர்.குற்றவாளிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி பழங்குடி யினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்; பிறகு இந்துத் துவ குழுவுடன் தொடர்புடைய ஒருவர் குற்றம் சாட்டப் பட்ட போது,  காவல்துறை கண்காணிப்பாளர் குமார் பிரதீக்கை பாஜக அரசாங்கம் இடமாற்றம் செய்தது.

ஜூன் 21, 2023 அன்று, ஆர்.எஸ் .எஸ் -இன்   மாணவர் அமைப்பான  ஏபிவிபியினர் ஒரு தனியார் கல்லூரியின் மீது தாக்குதல் நடத்தி வளாகத்தில் கலவரம் செய்ததை  அடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் போபாலின் பில்கிரியா காவல் நிலைய அதிகாரி பி.பி.சிங் உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகளை மாநில அரசு  நீக்கியது.  இவ்வாறு இந்துத்துவவாதிகளை பாது காக்கும் போக்கை மத்தியப் பிரதேச அரசு கடைப்பிடித்து வருகிறது. இதே ஆண்டுகளில் இதே மாநிலத்தில் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரி யர்கள், மாணவர்கள், ஆஷா ஊழியர்கள், தொழி லாளர்கள், வேலையற்ற இளைஞர்கள் மற்றும்  பிறரை பாஜக அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த போராட்டங்களின் போது எடுக்கப்பட்ட வீடி யோக்கள், அரசாங்கம் எப்படி கொடூரமான  தாக்கு தலை நடத்தியது என்பதை தெளிவாக காட்டு கின்றன. ஆனால் இதற்காக காவல் அதிகாரிகள் யாரும் இடமாற்றமோ, இடைநீக்கமோ செய்யப் படவில்லை. மாறாக, சங் பரிவார்களின் கல வரத்தை தடுக்க நடவடிக்கை எடுத்தால் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை களை பாஜக அரசு ஏவுகிறது.  இந்துத்துவ அமைப்புகளை பாதுகாப்பதன் மூலம் மத்தியப் பிரதேசத்தில் அமைதியையும்   ஜனநாயகத்தையும் படுகொலை செய்து வருகிறது பாஜக அரசு.