போபால், டிச.14- மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்ட தலைநகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள கடைக்கோடி கிராமம் பைன்சோடா. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த திருமண நிகழ்ச்சி, சாமியார் ராம்பால் ஆதரவாளர்களுக்கும், பஜ்ரங் தள் அமைப்பினருக்கும் இடையிலான மோதலாக மாறி உயிர்ப் பலியில் முடிந் திருக்கிறது. திருமணத்திற்குத் தலைமை தாங்கிய பாஜக பிரமுகரை, அவரால் அழைத்து வரப்பட்ட பஜ்ரங் தளத்தின் தலைவரே சுட்டுக் கொன்றுள்ளார். பைன்சோடா கிராமத் தலைவராக இரண்டு முறை பதவி வகித்தவர் பாஜக வைச் சேர்ந்த சர்பானந்த தேவிலால் மீனா. இவர் தனது தலைமையில் நடக்க விருந்த திருமணத்திற்கு, பஜ்ரங் தள் அமைப்பின் தலைவரும், அதே கிரா மத்தைச் சேர்ந்தவருமான சைலேந்திர ஓஜா-வையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
கூடவே, ஓஜாவின் ஆதரவாளர்களும் சென்றுள்ளனர். இந்நிலையில், திருமண வீட்டார், ஹரியானாவைச் சேர்ந்த சாமியார் ராம்பாலின் (கொலைக் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கிறார்) சீடர்களை முன்வைத்து திருமணச் சடங்கு களைச் செய்துள்ளனர். ஆனால் இந்த சடங்குகள் இந்து திருமணச் சடங்கு களுக்கு முரணாக இருப்பதாக பஜ்ரங் தள் கூட்டத்தினர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். இது வாக்குவாதமாக ஆரம்பித்து, ஒருகட்டத்தில் மோதலாக மாறியுள் ளது. திருமணத்திற்கு வந்தவர்களை பஜ்ரங் தள் அமைப்பினர் கட்டையால் அடித்து விரட்ட ஆரம்பித்தனர். பாஜக தலைவர் தேவிலால் மீனா இதனை தடுக்க முயன்ற போது, பஜ்ரங் தள் தலைவர் சைலேந்திர ஓஜா, அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். படுகாய மடைந்த தேவிலால் மீனா, மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். தற்போது இந்தச் சம்பவம் தொடர் பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் நான்குபேரை கைதும் செய்துள்ளனர்.