states

சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி பண்டிட்: அவரை விடுதலை செய்து விடுங்கள்!

பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர்  அரசுக்கு கோரிக்கை

போபால், ஜூலை 8 - பாஜக நிர்வாகியை விடுதலை செய்யுமாறு, சிறுநீர் கழிக்கப்பட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பழங்குடி இளைஞரே அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். “எவ்வளவு நாட்களுக்கு எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பீர்கள்.. என் னைக் கடத்திச் சென்று தாக்கினால் என்ன செய்வேன்..?” என்றும் பழங்குடி இளைஞர் தஷ்மத் ராவத் அச்சத்தை வெளிப்படுத்தி புலம்பியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம், சித்தி மாவட்டம் குப்ரி கிராமத்தில், ஆளும் பாஜக இளைஞர் அணி நிர்வாகியான பிரவேஷ் சுக்லா என்பவர், பழங்குடி யின தொழிலாளி தஷ்மத் ராவத் மீது சிறுநீர் கழித்த அராஜகம், அண்மை யில் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி யையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி யது. கண்டனங்களும் வலுத்தன. இதன் பின்னணியில், பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா, பட்டியல் வகுப்பினர்- பழங்குடியினர் வன்கொ டுமை தடுப்புச் சட்டம் மற்றும் ஐபிசி சட்டப் பிரிவுகள் 294 (பிறருக்கு தொல்லை தரும் வகையில், பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளு தல்), 504 (அமைதிக்கு குந்தகம் விளை விக்கும் வகையில் திட்டமிட்டு அவமா னப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். பிரச்சனை பாஜகவுக்கு எதிராக திரும்பிவிடக் கூடாது என்பதற்காக, பாதிக்கப்பட்ட தஷ்மத் ராவத்தை, தனது இல்லத்திற்கு வரவழைத்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்,

அவரது காலை கழுவி கவுரவித்தார். மேலும், தஷ்மத் ராவத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்ததுடன், தஷ்மத் வீடு கட்டுவ தற்கும் ரூ. 1.5 லட்சம் நிதியுதவி அளிக்கு மாறு உத்தரவிட்டார். இந்நிலையில், சிறுநீர் கழித்த சம்ப வத்தில் குற்றவாளியாக கைது செய்யப் பட்ட பிரவேஷ் சுக்லாவை விடுவிக்கு மாறு, பாதிக்கப்பட்ட தஷ்மத் ராவத்தே  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.  “கடந்த சில தினங்களுக்கு முன் பிரவேஷ் சுக்லா என்னிடம் தவறாக நடந்துகொண்டது உண்மைதான். இருப்பினும் தற்போது அவர் தனது  தவறை உணர்ந்து விட்டார். எனவே,  அவரை மாநில அரசு மன்னித்து விடு விக்க வேண்டும்” என கூறியுள்ளார். மேலும், “குற்றம் சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா தங்கள் கிராமத்தின் பண்டிட்” என்றும்; “எனவே தாங்கள் அவரை விடுவிக்க அரசிடம் கோரிக் கை வைப்பதாகவும்” கூறியிருக்கும் தஷ்மத், “கிராமத்தில் சாலை அமைப்ப தைத் தவிர, அரசாங்கத்திடம் கோருவ தற்கு வேறு எதுவும் இல்லை” என்றும் பரிதாபமாக தெரிவித்துள்ளார். மேலும், 600 கிலோ மீட்டர் பய ணித்து முதல்வரைச் சந்தித்துவிட்டு வந்திருக்கும்போதும், அவரிடம் பதற்றம் குறைந்தபாடாக இல்லை. “தற்போது பாதுகாப்புக்காக எனது வீட்டில் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ள னர். ஒரு சில நாட்கள்தான் இவர்கள் இருப்பார்கள். பிறகு என்னை யாராவது கடத்திச் சென்று தாக்கினால் என்ன செய்வேன், எனக்கும் என் குடும்பத்துக் கும் அரசு பாதுகாப்பு வழங்க வேண் டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.